ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், ஶ்ரீ மத்திய ஶ்வாமிமலை திருகோயில், போபால்
ஶ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் ஸ்வாமிநாத ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்தல்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் பூஜ்யஸ்ரீ ஜகத்குரு சங்கராசார்ய ஸ்வாமிகளின் பரிபூரண அனுக்ரஹத்துடன் மத்திய ஸ்வாமிமலையின் அடிக்கல் நாட்டு விழா 1978 ல் போபாலில் நடைபெற்றது. திருகோயில் கட்டுமான பணி அடுத்த ஆறு ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்பட்டு 1984 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அடுத்தடுத்த கும்பாபிஷேகங்கள் 1997 மற்றும் 2008 ஆண்டுகளில் நடந்தேரியது.
ஸ்ரீ கணேச சன்னதி
கார்த்திகேயா என்றும் அழைக்க பெறுகின்ற முருகப்பெருமான் மத்திய ஸ்வாமிமலையின் மூல மூர்த்தி. மூல மூர்த்தி உட்பட கீழ்கண்ட ஸ்வாமி சன்னதிகளும் இத்திருகோயிலில் அமைந்துள்ளது.
- ஐஸ்வர்ய கணபதி திருகோயில் (கணேஷ் ஜி மந்திர்)
- ஏகாம்பரநாத திருகோயில் (சிவ் ஜி மந்திர்)
- தேவி காமாஷி திருகோயில் (தேவி மந்திர்)
- நவகிரஹ மந்திர் (ஒன்பது புனித கோள்கள்)
- ஆஞ்சநேயர் திருகோயில் ( மாருதி மந்திர்)
- வேங்கடேஸ்வரா திருகோயில் (பாலாஜி மந்திர்)
- நாக தேவதை திருகோயில்
- ஶ்ரீ கிருஷ்ணா திருகோயில்
- பாதுகை மந்திர்.
ஸ்ரீ ஹனுமான் சன்னதி
போபால் முக்கிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10kms தூரத்தில், அரெரா குடியிருப்பில் இருக்கும் குன்றின் மேல் இந்த கோவில் அமைந்துள்ளது. பக்தர்கள் மிகவும் உத்சாகமாக கோவிலில் நடைபெரும் பல்வேறு தார்மிக நிகழ்சிகளில் கலந்து கொள்வார்கள். ஸ்ரீ அ.ச. ராமனாத சாஸ்த்ரி தலைமை அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
பாதுகை மந்திர்
நிகழ்சிகள்
திருகோவிலின் ஸ்வாமி சன்னதிகளுக்கு நித்ய பூஜைகளை தவிர விசேஷமாக பல்வேறு நிகழ்சிகள் செய்து வருகிறார்கள்.
- திருபுகழ் பஜனைகள் - கார்த்திகேய ஸ்வாமியின் புகழ் பாடும் ஸ்தோத்ரம்
- சங்கடஹர சதுர்த்தி - விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மாலை 5.30 மணிக்கு
- கிர்த்திகை மற்றும் சஷ்டி நாள்கள் - கார்த்திகேய ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8.30 மணிக்கு
- செவ்வாய் கிழமை- கார்த்திகேய ஸ்வாமியின் விசேஷ அபிஷேகம் காலை 9.30 மணிக்கு
- ஏகாதசி தினம் - பாலாஜி ஸ்வாமியின் விசேஷ அபிஷேகம் காலை 8.30 மணிக்கு
- பௌர்னமி தினம் - காமாக்ஷி அம்பாளின் விசேஷ அபிஷேகம் மாலை 6.00 மணிக்கு
- வெள்ளிகிழமை - காமாக்ஷி அம்பாளுக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை மாலை 6.00 மணிக்கு
- சனிக்கிழமை - பாலாஜி ஸ்வாமிக்கு சஹஸ்ரநாம அர்ச்சனை காலை 8.30 மணிக்கு நவகிரஹ புஜை காலை 9 முதல் 10 மணி வரை
- தனுர் மாதம் ( 15-Dec முதல் 13-Jan வரை)- தினந்தோரும் மாலையில் பாலாஜி ஸ்வாமிக்கு கல்யாண உத்ஸவம் மாலை 6 முதல் 8 மணி வரை
- அனைத்து அனுஷம், அவிட்டம் மற்றும் உத்திராட நக்க்ஷத்திர தினத்தன்று - விசேஷ புஜை மற்றும் ஹோமங்கள் நடைபெரும்.
திருகோயில் அமைந்துள்ள இடம்:
ஶ்ரீ மத்திய ஸ்வாமிமலை மந்திர்
எண் 12 பேருந்து நிருத்தம், E-7 அரெரா குடியிருப்பு,
போபால் - 462016 (மத்திய ப்ரதேசம்)
தூரம்:
* ஹபிப்கன்ஜ் ரயில் நிலையம் - 2kms
* போபால் பேருந்து நிலையம் - 10kms
* போபால் இரயில் நிலையம் - 15kms
* ராஜா போஜ் விமான நிலையம் - 20kms
மேலும் விவரங்களுக்கு அனுக வேண்டிய தொலைபேசி எண் - -0755-4241371; கைபேசி எண் - - 09826939306; மின்னஞல் kanchimuttbhopal@gmail.com
திருகோயில் நுழைவாயில் |
ஒரு பக்கத்திலிருந்து திருகோயில் தரிசனம் |
கார்த்திகேயா சன்னதிக்கு வெளியே அமைந்திருக்கும் மண்டபம் |
திருகோயில் அலுவலகம் |
நவராத்திரி மஹோத்சவத்தின் போது அம்பாளுக்கு அலங்கரித்த சிறப்பு அலங்காரங்கள். |
பாலாஜி ஸ்வாமி |
ஏகாம்பரேஸ்வரர் சன்னதி. |